வெள்ளை முடி வந்துவிட்டதா! இதை மட்டும் பண்ணுங்க..

வயதான காலத்தில் வரவேண்டிய வெள்ளை முடி தற்போது இளம் தலைமுறையினருக்கும் அதிகமாக வந்துவிடுகிறது.

இது பரம்பரையாக வரும். ஆனால் சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றாலும் அதிகம் வருகிறது.

தவிர தலைமுடிக்கு சரியான பராமரிப்பு கொடுக்காததும் முக்கியமான ஒன்று. சிலர் வெள்ளை முடியை மறைக்க ஹேர் டையை பயன்படுத்துவார்கள். ஆனால் இது நிரந்தர தீர்வு கொடுக்காது.

மேலும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். ஆனால் இதற்கு இயற்கையான முறையிலே தீர்வு காணலாம்…

  • வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.
  • 1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.
  • நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.
  • தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
  • மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.
  • கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால் முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.