இந்திய இராணுவத்தினர் மீது மீண்டுத் தாக்குதல் நடத்துவோம் என ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்த 14 ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த இயக்கத்தின் தளபதி ரியாஸ் நைகூ பேசிய 17 நிமிட ஆடியோ வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில், சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் காஷ்மீர் மக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்களுக்காக நடந்த சம்பவம் ஆகும்
காஷ்மீரில் இராணுவம் இருக்கும் சவப்பெட்டிகள் நிரம்பிக்கொண்டே இருக்கும், இறந்துபோவதற்காக இருக்கும் நாங்கள், யாரையும் வாழவிடமாட்டோம், எங்கள் அமைப்பில் 15 வயது சிறுவன் கூட தற்கொலைப்படையாக செல்வதற்கு தயாரா இருக்கிறான், இனிவரும் தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது.






