இந்த ஒருவாரத்தில் மட்டும் பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மெர்க்கல் மொத்தம் 10,000 மைல்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மேகன்மெர்க்கல் தற்போது ஏழரை மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் அவர் தமது நெருங்கிய நண்பர்களுடன் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து 3,500 மைல்கள் தொலைவில் இருக்கும் நியூயார்க் நகருக்கு சென்றுள்ள அவர், அங்கிருந்து 20 ஆம் திகதி மீண்டும் பிரித்தானியா திரும்புகிறார்.
தொடர்ந்து எதிர்வரும் 23 ஆம் திகதி 1,300 மைல்கள் தொலைவில் இருக்கும் மொராக்கோவின் காஸாபிளன்கா செல்கிறார்.
அங்கிருந்து எதிர்வரும் 25 ஆம் திகதி பிரித்தானியாவுக்கு திரும்புகிறார் மேகன் மெர்க்கல்.
11 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் மேகன் மெர்க்கல் மொத்தம் 10,000 மைல்கள் பயணம் மேற்கொள்வதுடன் அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் வட ஆப்பிரிக்கா என 3 கண்டங்களில் சென்று வருகிறார்.
இதில் காஸாபிளன்கா பயணத்தில் மட்டும் கணவர் ஹரி உடன் செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது.








