அரியவகை உயிரனத்தால் அதிர்ந்து போன மக்கள்!!

தற்போது இந்தியாவில் குறைந்துவரும் இனங்களில் முதலையும் ஒன்று. இந்த சூழலில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய உயிரியல் பூங்காவில் அரியவகை முதலை இருப்பது தெரியவந்துள்ளது.

கேந்திராபடா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா தேசியப் உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு சதுப்புநில முதலை, உவர்நீர் முதலை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.

இந்நிலையில் பிதர்கனிகா உயிரியல் பூங்காவில் வெள்ளை நிற முதலை ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. பித்ராகனிகா தேசிய உயிரியல் பூங்காவில் தோராயமாக ஆயிரத்து 742 முதலைகள் உள்ளது.

அங்கு உலகின் மிகப் பெரிய அரியவகை முதலையான, வெள்ளை முதலை பித்ராகனிகா பூங்காவில் இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த பூங்காவில் உள்ள ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகில் சென்றுள்ளனர். அப்போது பயணிகள் ஏரியில் வெள்ளை முதலை இருப்பதை கண்டுள்ளனர்.

அதனை அறிந்து பல உள்ளூர் மக்களும் வெள்ளை முதலையை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். மேலும் வெள்ளை முதலை இருப்பது அறிந்த சுற்றுலாப் பயணிகளும் பலர் பித்ராகனிகா தேசிய உயிரியல் பூங்காவிற்கு படையெடுத்து வருகின்றனர்.