வரம்கொடுத்த சாமியே அடிமடியில் கை வைத்தால்..? கதறும் பழங்குடியினர்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனசரகரை கண்டித்து மலைவாழ் மக்கள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேஉள்ள பர்கூர் மலை தாலக்கரை கொங்காடை பகுதியை சேர்ந்த பழங்குடியினர் மக்கள், வனக்குழு அமைத்து சீமார் புல்களை விற்பனை செய்து வருகின்றனர்.

பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசால் அந்த பகுதியில் விளையக்கூடிய சீமாற்று புல்லினை அறுவடை செய்து விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் அந்த மக்களுக்கே தெரியாமல் அந்தியூர் வனசரகர் பாலகிருஷ்ணன், சீமார் புல்களை விற்பனை செய்வதாக குற்றம்சாட்டி பழங்குடியின மக்கள் 40க்கும் மேற்பட்டோர் அந்தியூர் வனச்சரக அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின் மாவட்ட வனசரக அலுவலரை சந்தித்து புகார் மனுஅளிக்க முடிவு செய்து அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இப்போராட்டம் காரணமாக அந்தியூர் வனச்சரக அலுவலகம் முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.