காதலர் தினத்தில் மனைவியை விட்டு பிரிந்த இளவரசர் ஹரி!

திருமணம் முடிந்து முதல் காதலர் தினத்தை கொண்டாடவிருந்த இளவரசர் ஹரி, கர்ப்பிணி மனைவி மேகனை விட்டு பிரிந்து தன்னுடைய பணிக்கு திரும்பியுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது கர்ப்பிணியாக இருக்கும் மேகனுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது என செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதனை எதிர்பார்த்து அரச குடும்பம் உட்பட ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் வரும் முதல் காதலர் தினத்தை இளவரசர் ஹரி தன்னுடைய மனைவியுடன் கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நோர்வே, பார்புபோஸில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

நோர்வே ஆயுதப்படைகளால் நடத்தப்படும் பன்னாட்டுப் பயிற்சியில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பறக்கும் தகுதிகள், குளிர் காலநிலையில் உயிர் வாழ்வது மற்றும் பனி காலத்தில் கார் ஓட்டுவது பற்றிய பயிற்சிகளை அங்கு மேற்கொள்ள உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹாரி டிசம்பர் 2017 ல் அவருடைய தாத்தா பிலிப் வகித்த கேப்டன் ஜெனரல் ராயல் மரைன்ஸாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.