இது கிரிமினல் குற்றமாகும்! அமுலானது புதிய சட்டம்

பெண்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாசமாக படமெடுப்பது பிரித்தானியாவில் சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த கீனா மார்ட்டின் என்பவர் தொடுத்த வழக்கின் பேரிலேயே இந்த சட்டம் வந்துள்ளது.

வழக்கு பின்வருமாறு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது இவருக்கே தெரியாமல் ஆபாச கோணத்தில் படமெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், அலட்சியப்படுத்தப்பட்டதால் தீவிரமாக பிரசாரத்தை முன்னெடுத்தார்.

இதுதொடர்பான மனுவில் 58,000க்கும் அதிகமான நபர்கள் கையெழுத்திட்டதுடன் தொழிலாளர் கட்சியும் ஆதரவு அளித்தது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் எலிசபெத் ராணியின் ஒப்புதலும் கிடைத்துள்ளதால் அமுலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து கீனா மார்டின், நியாயம் வேண்டி மிக சாதாரணமானவர்கள் போராடினால் கூட பலன் கிடைக்கும் என்பதையே இது காட்டுகிறது என கூறியுள்ளார்.