காதலர் தினத்துக்கு எதிர்ப்பு! களத்தில் இறங்கிய இந்து முன்னணி அமைப்பு!

சர்வதேச காதலர் தினம் இன்று கொண்டப்படுகிறது. இந்நிலையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை காந்திபுரம் பகுதியில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்தும் எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் நடத்தி வரும் நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் கிராஸ் கட் சாலையில் ஊர்வலமாக சென்று காதலர் தின எதிர்ப்பு கோஷமிட்டனர்.

அப்போது காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து எறிந்த அவர்கள் அவற்றை தீயிட்டும், செருப்பால் அடித்தும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும் காதலர் தினத்தின் போது காதல் என்ற பெயரில் அத்துமீறுபவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

காவல் துறையினரின் அனுமதியை மீறி ஊர்வலமாக சென்றதால் போராட்டம் நடத்திய சுமார் 55 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.