மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வசித்து வந்தவர் சதீஸ். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆயதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சதீஸ் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். மேலும் இதுகுறித்து சதீஷ் தனது பெற்றோரிடம் கூறி இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரது காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சதீஷ் தனது பெற்றோரை சம்மதிக்க வைக்க பலமுறை முயன்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அவர்கள் சதீஷின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் விடுமுறை கிடைத்ததால் ஊருக்கு வந்த சதீஸ் மீண்டும் தனது காதல் குறித்து பெற்றோரிடம் பேசியுள்ளார். ஆனால் அவர்கள் சிறிதும் மனம்மாறாமல் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் வெறுத்துப்போய்,மனமுடைந்த சதீஸ் இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட சதீஷின் பெற்றோர்கள் துடிதுடித்து கதறியுள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து பெற்றோர்களிடம் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.






