சற்றுமுன் உயர்நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு.!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலை ஓரங்களிலும் விதி மீறி வைக்கப்படும் பேனர்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதிகள், தமிழக அரசுக்கும், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கும் சரமாரியாக கேள்விகளை முன் வைத்துள்ளனர்.

அதில், ”விதி மீறல் பேனர்கள் வைப்போர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அரசியல் கட்சிகளின் விதிமீறல் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் உங்கள் அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியல் கட்சியில் சேர்ந்து விடுங்கள். இதுகுறித்து பலமுறை உத்தரவு பிறப்பித்தும் இது தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசும், அதிகாரிகளும் இதற்கான விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் அனுமதியில்லாமல், விதியை மீறியும் பேனர்கள் வைக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பேனர்கள் வைக்க அனுமதியளிக்க வேண்டும் என்று அதிமுகவின் பாலகங்கா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுஅளித்து இருந்தார். இந்நிலையில், சற்றுமுன் இந்த மெனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டவிரோத பேனர்களை அகற்றுவது மட்டும் அரசின் கடமை அல்ல, பேனர்கள் வைக்காமல் தடுப்பதும் அரசின் பணி தான் என்று கூறி பேனர் வைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.