காதலித்த பெண்ணுடன் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் கிராமத்தை சேர்ந்த செல்வரசூன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் என்பவர் கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் கீர்த்தனாவை திருமணம் செய்து கொள்ள ராஜசேகர் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த செல்வரசூன் மற்றும் அவரது நண்பர்கள் போலீசில் புகார் செய்து ராஜசேகருக்கும் கீர்தனாவுக்கும் காதல் திருமணம் நடந்தி வைத்தனர்.
இந்த விவகாரத்தால் செல்வரசூன் மற்றும் ராஜசேகர் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தனக்கு காதலியை திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில் ராஜசேகர் இருந்து வந்தார். செல்வரசூன் நண்பர் ஒருவரது வீட்டில் இருந்த பொழுது, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த ராஜசேகர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் செல்வரசூன் மயங்கி விழுந்தார்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே செல்வரசூன் பலியானார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.






