திருமணம் முடிந்த 3 மாதங்களில் பலியான கர்ப்பிணி!

பிரித்தானியாவில் திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் கணவனுடன் சேர்ந்து விபத்தில் சிக்கி பலியாகியிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு லண்டன் பகுதியில் ஹாரோ பகுதியில் 60, 30 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் 50 வயதுடைய ஒரு பெண் இருக்கும் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் 4 பேர் கத்தி முனையில் கொள்ளையடிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஹெலிகாப்டர் மற்றும் 9 கார்களில் ஏராளமான பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட அந்த கும்பல் வேகமாக அந்த இடத்திலிருந்து காரில் கிளம்பியது.

கார் செல்லக்கூடிய தவறான பிபாதையில் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் இடையூறு அளிக்கும் வகையிலும், பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பும் விதமாகவும் அந்த கும்பல் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது.

அப்பொழுது அந்த கார், திடீரென சாலை ஓரத்தில் இருந்த வேலியின் மீது மோதி பயங்கரமான விபத்தில் சிக்கியது.

இதனை பார்த்ததும் வேகமாக ஓடி வந்த பொலிஸார் உள்ளிருந்தவர்களை பிடிக்க முயற்சித்த போது, ஒரு பெண்ணும், ஆணும் உயிரிழந்த நிலையிலும், மற்றோரு நபர் பலத்த காயங்களுடனும் இருப்பதை பார்த்துள்ளனர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த நபரை சிகிச்சைக்கு உட்படுத்தி கைது செய்தனர். பின்னர் இறந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, பேட்ரிக் மெக்டொனாக்கம் (19) மற்றும் ஷானு (18) என்கிற தம்பதியினர் 11 வாரங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

மேலும், ஷானு 7 மாத கர்ப்பிணியாக இருந்ததும், ஏப்ரல் மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த பயங்கரமான சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் பேட்ரிக்கிற்கு தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகித்துள்ளனர்.