தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்! வெளிச்சத்திற்கு வந்த சதித்திட்டம்.!

நாலச்சோப்ரா ஜதாசங்கர் சால் பகுதியில் வசித்து வந்தவர் ராம்மிலன். இவரது மனைவி குசும் பிரஜாபதி. இவரது மூத்த மனைவி உத்தரபிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் ராம்மிலன் குசும் பிரஜாபதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகேஷ் என்ற 18 வயது மகன் 4 பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் குசும் பிரஜாபதி மிராரோட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கு தனது வீட்டை ரூ.6 லட்சத்துக்கு விற்க முடிவு செய்தார்.

இதனை தொடர்ந்து வீட்டை வாங்கியவரிடமிருந்து ராம்மிலன் பணத்தை வாங்கி வைத்துக்கொண்டார்.ஆனால் அதனை மனைவியிடம் கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த மனைவி பணம் தனக்கு வராததால் வீட்டை விற்க மறுத்துவிட்டார். மேலும் பணம் கொடுத்த நபர் ராம்மிலனிடம் பணத்தை கேட்டுதொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் ராம்மிலன் மற்றும் குசும் பிரஜாபதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குசும் பிரஜாபதியை பிரிந்து ராம்மிலன் தனது 4 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு தனியாக சென்றார்.

பின்னர் 3-வதாக திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து தனியாக வசித்து வரும் குசும் பிரஜாபதியை கொலை செய்தால், வீடு தனக்கு கிடைத்து விடும் என கருதிய ராம்மிலன்,மகன் மகேசுடன் சேர்ந்து மனைவி குசும் பிரஜாபதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன்படி மகேஷ் தந்தை ரூ.6 லட்சத்தை தருவதாக கூறி, தனது தாய் குசும் பிரஜாபதியை நாலச்சோப்ரா ரெயில் நிலையம் அருகே வரும்படி அழைத்து, தாய் என்று கூட பாராமல் மகேஷ் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதனையடுத்து கொலை செய்யப்பற்ற நிலையில் சடலம் இருப்பதை அறிந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் ராம்மிலனிடம் விசாரித்ததில் அவர்தான் தனது மகன் மகேசுடன் சேர்ந்து குசும் பிரஜாபதியை கொலை செய்தார் என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் ராம்மிலன், மகேஷ் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்த மகேந்திரா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.