இரவு முழுவதும் கணவர் சடலத்தை கட்டிப்பிடித்தபடி இருந்த இளம்பெண்…

பிரித்தானியாவில் திருமணமான 70 நாளில் கணவர் உயிரிழந்த நிலையில், அவர் சடலத்தை இரவு முழுவதும் கட்டிப்பிடித்தப்படி இருந்த மனைவியின் செயல் நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

Hertfordshire-ஐ சேர்ந்தவர் வெயின் . இவர் மனைவி லிசா பர்டன்.

வெயினும், லிசாவும் சில காலமாக காதலித்த நிலையில் காதலிக்கும் போதே லிசா கர்ப்பமானார். இதையடுத்து அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதன்பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லிசாவும், வெயினும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் நடைபெற்ற இரண்டாவது நாள் வெயினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார்.

வெயினுக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்டது தெரியவந்தது.

இதற்காக அவர் மருத்துவம் பார்த்த நிலையிலும் நோய் முற்றி கல்லீரலிலும் புற்றுநோய் பரவியது.

இதனால் அவர் விரைவில் உயிரிழந்து விடுவார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்நிலையில் திருமணமான 70 நாட்களில் வெயின் உயிரிழந்தார்.

வெயின் நினைவுகளோடு வாழும் அவர் மனைவி லிசா கூறுகையில், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் வெயினால் பேச முடியவில்லை.

என்னிடம் இறுதியாக ஐ லவ் யூ என வெயின் கூறினார், இதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்.

வீட்டில் படுத்திருந்த நிலையில் வெயின் உயிர் பிரிந்தது.

இரவு முழுவதும் அவர் சடலத்தை கட்டிப்பிடித்தப்படி நான் இருந்தேன். அவரின் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை.

அடுத்தநாள் சவப்பெட்டியில் வெயின் உடல் வைக்கப்பட்ட போது இறுதியாக அவரிடம் என் காதலை தெரிவித்தேன்.

மிகச்சிறந்த மனிதரை இழந்து நான் வேதனையுடன் என் வாழ்க்கையை கழித்து வருகிறேன் என கூறியுள்ளார்.