இந்த உணவில் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிடுங்க: நுரையீரலில் நோய்கள் உண்டாகாதாம்

இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்படையும் நோய்களில் ஒன்று தான் நுரையீரல் பாதிப்பு.

நுரையீரல் மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். இது வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது.

நுரையீரலை பாதுக்காக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது நுரையீரலில் சேர கூடிய நச்சுக்களை வெளியேற்றும் உணவுகள் தான்.

நுரையீரலை பாதிப்பில் இருந்து காக்க இயற்கை கிடைக்கும் உணவுகளை உட்கொண்டாலே போதும். நுரையீரல் பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

தற்போது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 9 உணவுகளில் குறைந்த பட்சம் ஒன்றையாவது சாப்பிட்டால் போதும் என்று சொல்லப்படுகின்றது. அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • வாரத்திற்கு 2 முறை உணவில் மீனை சேர்த்து உண்டால் நுரையீரலில் கோளாறுகள் உண்டாகாது. மேலும், நுரையீரலில் ஏற்பட கூடிய வீக்கத்தையும் இது தடுத்து விடும்.
  • தொடர்ந்து தக்காளி ஜுஸ் அல்லது உணவில் சீரான அளவில் தக்காளியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படாதாம்.
  • ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். நுரையீரல் பிரச்சினையே வராது.
  • தினமும் 100 மில்லிகிராம் அளவிற்கு வைட்டமின் சி நிறைந்த இந்த உணவுங்களை சாப்பிட்டால் நுரையீரல் பாதிப்பு, இதில் சேர்ந்துள்ள அழுக்குகள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்து விடும்.
  • ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் உடலில் பல்வேறு நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் நுரையீரல் பாதிப்பில் இருந்தும் காக்கும்.
  • தினமும் கொஞ்சம் வால்நட்ஸ் சாப்பிட்டால் நுரையீரலுக்கு எந்த பாதிப்பும் உண்டாகாதாம்.
  • எல்லாவித பாதிப்பில் இருந்தும் காக்கவும் கிரீன் டீ உதவும். இது நுரையீரலை சுத்தமாக வைத்து கொள்ளவும், இதிலுள்ள பாலிபீனல்ஸ் நுரையீரல் தசைகளை வீக்கம் அடையாமல் பார்த்து கொள்ளும். இதனால் சுவாச கோளாறுகள் உண்டாகாது.
  • வெறும் காபி பொடியை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிளாக் காபி நுரையீரல் பிரச்சினைக்கு தீர்வை தருகிறது.
  • பச்சை கீரைகளை உணவில் வாரத்திற்கு 2 முறையாவது சாப்பிடுவோருக்கு எந்தவித நுரையீரல் பாதிப்பும் ஏற்படாதாம்.
  • அன்றாடம் ஆளி விதைகளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பிரச்சினைகள் உண்டாகாது.