காலையில் இதையெல்லாம் கடைப்பிடியுங்கள்! வாழ்க்கையில்மாற்றம் வரும்!!

ஒபிசிட்டி அல்லது உடல் பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. மேலும், இது ஒரு பெரும் உடல்நல கவலையாக மாற்றியுள்ளது.ஒபிசிட்டியை தடுப்பதனால் நாம் பல ஆபத்தான நோய்களிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடிகிறது.

தினமும் காலை எழுந்தவுடன் உடல் எடை குறைக்க சில நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.அதிக நேரம் தூங்குவதால் நம் உடல் எடை கூடும். தினமும் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூக்கம் என்பதே ஆரோக்கியமானதாகும்.வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் எப்போதும் உங்கள் காலை உணவை சாப்பிட வேண்டும்.நீங்கள் காலை உணவை தவிர்த்தால், உங்கள் எடை இழப்பு இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது.

ஆரோக்கியமற்ற உணவு உங்களுக்கு ஒரு மந்தமான உணர்வை ஏற்படுத்துவதோடு உடல் எடை மற்றும் கிரோனிக் டிசீஸ் ஆபத்தை அதிகரிக்கிறது.ஆரோக்கியமான காலை உணவுகளில் சில நட்ஸ், பழங்கள், கிரீன் டீ, கீன்வா, ஸ்மூத்திஸ், தூய தயிர் ஆகியவை அடங்கும்.பேன்கேக்ஸ், டோனட்ஸ், பாஸ்டரிஸ், பேக்கேஜட் ஜூஸ், இனிப்பு சார்ந்த உணவு ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கவும்.

காலை எழுந்தவுடன் வீட்டிற்கு உள்ளேயே இல்லாமல் வெளியில் சென்று காலை வெயிலை ரசிக்க வேண்டும். காலை வெயில் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.

நீங்கள் காலை எழுந்தவுடன் கோப்பி அல்லது டீ குடிக்கும் முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது லெமன் வாட்டர் குடிக்க வேண்டும்.

தண்ணீர் உட்கொள்ளல் உங்கள் உடலில் சரியான வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.

இது செரிமானத்திற்கும் உதவுகிறது. மேலும், தண்ணீர் விரைவாக வயிற்றை நிரப்புவதால், காலை உணவு அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது.காலையில் உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க ஓர் நல்ல வழி.

உங்கள் உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு, உங்கள் எடையைக் கண்காணிக்க வேண்டும். தினமும் காலை தங்கள் எடையை கண்காணிப்பது மூலம் நம்மால் எளிதில் எடையை குறைக்க முடியும்.