பாடசாலை மாணவனின் காதை கடித்த பெண்ணொருவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தனது மகளின் காதலான பாடசாலை மாணவனின் காதை கடித்த குற்றச்சாட்டின் கீழ் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பலங்கொட நகரத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் மற்றும் மாணவிக்கு இடையில் காதல் தொடர்பு ஒன்று காணப்பட்டுள்ளது.
தாய் வீட்டில் இல்லாமையினால் காதலி தனது வீட்டிற்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய காதலியின் வீட்டிற்கு சென்ற போது, திடீரென வீட்டிற்கு வந்த தாயார் காதலனை தாக்க முற்பட்ட போது அவரது காதை கடித்துள்ளார். இரத்த காயத்துடன் காதலன் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கடித்த எடுத்த காதுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும் அந்த காதை பொருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தாயார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.






