உயர்நீதிமன்றம், பொதுப்பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக மற்றும்ஒப்பந்த ஊழியர்களுக்கு, அதே பணியைச் செய்யும் நிரந்த ஊழியர்களைப் போல ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜாசெல்வன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில், உயர்நீதிமன்றம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக் கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, அதே பணியைச் செய்யும்நிரந்த ஊழியர்களைப் போல ஊதியம்நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
பொதுப்பணித்துறையின் கீழ் பணியாற்றும், தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் தற்காலிக, தினக்கூலி பணியாளருக்கு வழங்கும் ஊதியத்தை போல் ஊதியம் வழங்க வேண்டும்.
ஊதியம் தொடர்பாக பொதுப் பணித்துறை முதன்மை செயலர் பிப்ரவரி 22-ஆம் தேதிக்குள் அரசாணைவெளியிட வேண்டும். இடைத்தரகர்கள்மூலமாக அன்றி பொதுப்பணித்துறையினரே பணியாளர்களை பணியமர்த்தி, அவர்களுக்கான பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்கவேண்டும்.
தினக்கூலி மற்றும் ஒப்பந்தப்பணியாளர்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கான ஊதிய வரைமுறை குறித்து அரசாணை வெளியிடப்பட வேண்டும்.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகைப்பதிவு பின்பற்றப்பட வேண்டும். இந்த உத்தரவைப் பின்பற்றிதமிழகம் முழுவதும் உள்ள தினக்கூலிமற்றும் துப்புரவுப் பணியாளர்களுக் கான ஊதியம் முறைப்படுத்த வேண்டும்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில், 24 மணிநேரமும் செயல்படும் மருந்தகத்துடன் கூடிய மருத்துவமனையை அமைக்க வேண்டும்.
பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் இந்த மருத்துவமனை அமைய வேண்டும். செயற்பொறியாளருக்கு தனி அலுவலகம் அமைத்துத்தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கைமுடித்து வைத்தனர்.






