அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் கடும் குளிரில் அமிழ்ந்துள்ள நிலையில், கல்லூரி மாணவன் ஒருவன் பனிக்கட்டியாக உறைந்துபோன சம்பவம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் போலார் வோர்டெக்ஸ் என்று அழைக்கப்படும் ஆர்க்டிக் பகுதி மேலடுக்கு காற்றழுத்தத் தாழ்வு அமைப்பினால் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவி வருகிறது.
வியாழக்கிழமை வரைக்கும் கடும் குளிருக்கு 10 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் குளிரினால் அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் ஊட்கங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் அயோவா மாகாணத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கடும் குளிரில் சிக்கி பனிக்கட்டியாக உறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 வயதேயான குறித்த மாணவர் கல்லூரி வளாகத்தில் அதிகாலை 3 மணியளவில் சலனமற்று கிடந்ததை சக மாணவர் கண்டு கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அவரை மீட்ட அவசர உதவிக்குழுவினர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குறித்த மாணவர் மருத்துவமனையிலேயே மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தை அடுத்து அனைத்து கல்லூரிகளுக்கும் எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சிகாகோவில் இரவு நேரங்களில் மைனஸ் 50 டிகிரியாக வெப்பநிலை கடும் சரிவு கண்டுள்ளது. மத்தியமேற்கு பகுதியில் உள்ள நகரங்களில் வெப்பமாக்க மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 1000 விமானங்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இல்லினாய்ஸ் மாநகரத்தில் மட்டும் சுமார் 16,000 பேர் வீடிழந்து பரிதவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.