திருமணமான பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்திருந்த இளைஞன்! கணவனுக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் பாலில் மயக்க மருத்து கொடுத்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை அடுத்த கொசவன்பாளையம் பகுதியில் இருக்கும் கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் கடந்த 14-ஆம் திகதி சந்தேகத்திற்கிடமாக புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலத்தை பொலிசார் மீட்டனர்

அதன் பின் இறந்த நபர் யார் என்பது குறித்து பொலிசார் விசாரித்து கொண்டிருந்த போது, கடந்த 26-ஆம் திகதி திருநின்றவூர் செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்த மணிகண்டன்(20), பூமி நாதன் மற்றும் அய்யனார்(27) ஆகியோ மது அருந்திவிட்டு போதையில் ஒருவரை கொலை செய்து உடலை புதைத்துவிட்டதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனால் பொலிசார் உடனடியாக அவர்கள் மூன்று பேரையும் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தததால், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

கூடுவாஞ்சேரி, வள்ளலார் நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி செல்வியும் போலீசில் சிக்கிய மணிகண்டனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். 35 வயதான செல்வியுடன் 20 வயதுள்ள மணிகண்டனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த குமார், தனது மனைவி செல்வியையும் 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சில மாதங்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரியில் குடியேறியுள்ளார்.

இருப்பினும் இருவரும் செல்போனில் பேசிவந்துள்ளனர். அதுமட்டுமின்றி இருவரும் வீட்டில் தனிமையில் இருந்ததை குமார் பார்த்துள்ளார். இது குறித்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால் கணவன் உயிரோடு இருந்தால், தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருப்பார் என்று மணிகண்டன் மற்றும் செல்வி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 10-ஆம் திகதி கணவனுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த செல்வி, சிறிது நேரம் கழித்து செல்போன் மூலம் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

நள்ளிரவில் தனது கூட்டாளிகள் இருவருடன் வீடு புகுந்த மணிகண்டன், குமாரை கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தில் அழுத்தியும் கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை அங்கிருந்து லோடு ஆட்டோவில் ஏற்றி திருநின்றவூர் கூவம் ஆற்றங்கரையில் புதைத்துள்ளனர்.

பின்னர் செல்வியை, அவளது 3 குழந்தைகளுடன் கூடுவாஞ்சேரியில் இருந்து அழைத்து வந்த மணிகண்டன், தன்னுடன் செங்கல் சூளை குடியிருப்பிலேயே தங்க வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து செல்வி, மணிகண்டன், அய்யனார், பூமிநாதன் ஆகிய 4 பேரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை கைது செய்தனர்.