தலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமி!

உலகின் பல்வேறு நகரங்களில் ஹாலோவின் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே என்னும் நகரம் உள்ளது. இந்த நகரத்தில் வசித்து வருபவர் கிறிஸ்டல் ஹவாங் இவருக்கு 2 வயதில் மாயா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். இந்த குழந்தையின் வீடியோ ஒன்று தற்போது இணையதள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இந்த விழாவில் எதவது அசத்தலாக செய்ய வேண்டும் என நினைத்து தனது மகள் மாயா, தனது தலையை தனியே வெட்டி தன் கையில் எடுத்து வருவதுபோல மேக் அப் செய்தார்.

2 வயது சிறுமி ஒருத்தி தலையில்லாமல் வெறும் முண்டமாக நடந்து வருவதை பார்த்த பெரும்பாலானோர் அதிர்ச்சி அடைந்தனர். மாயா தன் தலையை தானே கையில் கொண்டு வரும் இந்த வித்தியாசமான காட்சியை வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலாகி வருகிறது.