சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரம் சீரழிவு.! ஆச்சரியமா இருக்கா?

நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அப்படி நாம் பயன்படுத்தும் செல்போனில் வாட்ஸ் அப் என்ற செயலி செல்போனுக்கே இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

ஆயிரம் நல்ல விஷியன்கள் இருந்தாலும் ஒரு கெட்ட விஷயம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி வாட்சப்பில் வைரலாக சில நல்ல விஷியன்கள் வரும்போது அதனை நம்மையும் மீறி பகிர்வது நம் அனிச்சை செயலாக மாறி விடுகிறது. அப்படியான ஒரு வாட்ஸ் அப் விரலை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரம் சீரழிவு.! ஆச்சரியமா இருக்கா?!!

ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்

அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்

வட்டியும் கட்ட மாட்டான், பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு பிரயோஜனம் இல்லாதவன்.

கார் இன்சூரன்ஸ் பண்ண வர மாட்டான்

இந்த பெட்ரோல் டீசல்.. ம்ஹூம் இவனால அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல..

சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்வதில்லை

பார்க்கிங் கட்டணம் எங்கேயும் செலுத்த மாட்டான்

இதெல்லாம் போய்த் தொலையட்டும்,
இவனுக்கு சுகர் வராது இதய நோய் வராது குண்டாகவும் மாட்டான்,
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவர்களுக்குத் தேவையில்லை.

உலக
பொருளாதாரம் வளர இவர்கள் எதுவும் செய்வதில்லை…

அதே சமயம் ஒரே ஒரு பிஸ்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்
10 இதய டாக்டர்
10 பல் டாக்டர்
10 டயட்டீசியன் இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்.

உடனே முடிவெடுங்க
சைக்கிளா? காரா?

இந்திய பொருளாதாரமா?
உங்க உடல் நலமா?

(இந்த செய்தியில், பீட்ஸா உடல் நலத்துக்கு கேடு என்ற தகவல் மட்டும் அதிகாரபூர்வமாக எந்த மருத்துவரும் இதுவரை அறிவிக்கவில்லை. மற்றபடி கருத்து உண்மைதான். இருப்பினும் அதிக தூர பயணத்திற்கு சைக்கிளை பயன்படுத்த முடியாது)