தூக்கம் வருவதில் சிக்கலா? தீர்வை பரிந்துரை செய்த ஆய்வு…

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருள்ளும் பல பிரச்சினைகள் குடிகொண்டுள்ளன.

இதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் காரணமாக இரவில் தூங்குவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஜெனோவா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்தது.

இதன்போது குழந்தைகளை தொட்டிலில் வைத்து அங்கும் இங்கும் அசைக்கும்போது அவர்கள் விரைவாக தூங்கும் நுட்பத்தை வயது வந்தவர்களுக்கும் பிரயோகித்துள்ளனர்.

இது வெற்றியளித்துள்ளது. எனவே அசையக்கூடிய கட்டில்களை பயன்படுத்தும்போது விரைவாக தூக்கம் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கின்றமை வெளிப்படையாகியுள்ளது.

இந்த ஆய்விற்காக வயது வந்த 18 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.