துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கள்ளத்தோணியில் தமிழகம் வந்த இலங்கை வாலிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கை மன்னார் வளைவு பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் செந்தாமரைக் கண்ணன்(42).
இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக கள்ளத்தோணியில் ராமேஸ்வரம் வந்துள்ளார். அங்கிருந்து மதுரை சென்ற அவர், தன்னுடைய தங்கையின் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், தூத்துக்குடி தாளமுத்துநகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் உறவினர் ஒருவர் இறந்ததால், அவருடைய துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செந்தாமரை கண்ணன் சென்றிருக்கிறார்.
இதனை அறிந்த பொலிஸார் அங்கு வைத்தே அவரை கைது செய்துள்ளனர்.







