செம்பருத்தி பூவில் இவ்வளவு மருத்துவ குணங்களா???

கிராமங்களில் ஒவ்வாறொருவரின் வீட்டிலும் இருக்க கூடிய பூச்செடி என்றால் அது செம்பருத்திதான். இன்று பிரபலமாக உள்ள ரோஜா பூவை விட மருத்துவ குணத்தில் அவ்வளவு சிறப்பு பெற்றது. முக்கியமாக கண் பிரச்சனைகளுக்கு மிக சிறந்த மருந்து.

செம்பருத்தி பூ
2 செம்பருத்தி பூவின் இதழ்களை சுத்தப்படுத்தி எடுக்கவும். அதனுடன், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைத்து, அதனுடன் வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர கண்களில் ஏற்படும் எரிச்சல், சிவந்த தன்மை மாறும். அழற்சி, தொற்று விலகும். பல்வேறு நன்மைகளை கொண்ட செம்பருத்தி பூ கண்நோய்களுக்கு அற்புத மருந்தாகிறது. மேலும் இதய நோய்களை போக்குகிறது.

வில்வ இலை
வில்வ இலைகளை சுத்தப்படுத்தி பாத்திரத்தில் போட்டு லேசாக வதக்கவும். இதை ஆறவைத்து இளம் சூட்டுடன் கண்களை மூடிக்கொண்டு இலைகளை அரைமணி நேரம் துணியால் கட்டி வைத்து எடுக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கண்களை கழுவினால் சிவப்புதன்மை மறையும். கண்வீக்கம் சரியாகும். கண்நோய்களை போக்கும் அற்புத மருந்தாக வில்வம் விளங்குகிறது. இது, வீக்கத்தை கரைக்க கூடிய தன்மை கொண்டது.

அகத்தி பூ
அகத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து நீர்விட்டு சுத்தப்படுத்தி, அதனுடன் கருவேலம் இலைகளை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி ஆறவைத்து கண்களை கழுவினால் கண்களின் சிவப்பு தன்மை மாறும். கண்களில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். பார்வை தெளிவுபெறும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அகத்தி கண்நோய்களை குணப்படுத்தும்.

விக்கலை நிறுத்த
விக்கலை நிறுத்த கடுகு அற்புத மருந்தாகிறது. கடுகை அரைத்து மெல்லிய துணியில் தடவி தொண்டை குழியின் மேல் சிறிது நேரம் பற்றாக போடுவதன் மூலம் விக்கல் உடனடியாக நின்றுபோகும்.