அரசியல் மோதலில் 16 பேர் பரிதாப பலி.!!

வெனிசுலா நாட்டில் உள்ள அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில் கிளம்பிய அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் காரணமாக அரசிற்கு நிலையற்ற தன்மையானது ஏற்பட்டது. இத்தனை எதிர்ப்பிற்கும் மத்தியில் கடந்த வருடத்தில் அதிபர் தேர்தலானது நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேர்தலை புறக்கணித்ததால்., அதிபர் மதுரோவே மீண்டும் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். இந்த விசயத்தை வன்மையாக கண்டித்த எதிர்க்கட்சிகள்., எதிர்ப்பு தெரிவித்தது மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் அதிபர் பதவியில் இருந்து மதுரோ பதவி விலகிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து., அதற்க்கான தொடர் போராட்டங்களை அறிவித்து., ஆதரவு திரட்டிய நிலையில்., போராட்டத்தில் திடீரென வன்முறையானது வெடித்தது.

மேலும்., அதிபருக்கு எதிராக இராணுவத்தில் பணியாற்றும் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களை போராட்டத்திற்கு அழைத்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்., நேற்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில்., ஏற்பட்ட மோதலால் சுமார் 16 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் தகவல் வெளியானது.