முடி வேகமாக வளரணுமா?

எல்லா பெண்களுக்கு முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

இதற்காக டிவியில் காட்டப்படும் விளம்பரங்களை நம்மி கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி தலைக்கு பாவிப்பதுண்டு.

உண்மையில் இவை செயற்கையாக செய்யப்படுபவை. அதற்கு நம் முன்னோர்கள் அந்த காலத்திலிருந்தே கையாண்டு வந்த இயற்கை பொருட்களை வைத்தே முடி வளர்சியினை அதிகரிக்க முடியும்.

முடி வளர்ச்சிக்கு கற்பூர எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது கற்பூர எண்ணெயை வைத்து முடியை எப்படி வேகமாக வளர செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கற்பூர எண்ணெய்
  • தயிர்
  • முட்டைகள்
செய்முறை

ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து, கற்பூர எண்ணெய் மற்றும் தயிர் சேர்க்கவும்.

அடுத்து, 1 முழு முட்டையை கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

உங்கள் முடி மிகவும் நீண்டதாக இருந்தால் நீங்கள் மாஸ்க்கிங்கிற்கு இன்னுமொரு முட்டையைப் பயன்படுத்தலாம்.

இப்போது ஒரு ப்ரஷ் -ஐ எடுத்து உங்கள் தலைமுடி பகுதியில் மெதுவாக அனைத்து முடிகளிலும் இந்தக் கலவையைப் பூசவும்.

மாஸ்க்குடன் உங்கள் முழு முடியையும் மூடிய பிறகு 30-45 நிமிடங்கள் காத்திருங்கள், பின்னர் சாதாரண தண்ணீரில் ஒரு லேசான ஷாம்பு கொண்டு அதை சுத்தம் செய்யலாம்.

இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரித்து நீளமாக கூந்தலை பெறலாம்.