லண்டன் தமிழர் கடையில் களவெடுத்த வேலையாள்: இப்படி மிரட்டலாமா ?

ஈழத் தமிழர் ஒருவரது கடையில் வேலை பார்த்த தமிழர் ஒருவர். கடையில் கல்லாப் பெட்டியில் அடிக்கடி கை வைத்து மாட்டிக்கொண்டார். CCTV ல் பார்த்தவேளை அவர் பல தடவை காசை களவாடியது தெரியவந்துள்ளது. அவரை வேலையால் நிறுத்தி இருக்கலாம். இல்லையென்றால் பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் இங்கே தான் சர்சை வெடித்துள்ளது. களவாடிய நபரை தண்டைக்கு உற்படுத்த இவர்கள் யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலையத்தளங்களில் பரவி சர்சையை தோற்றுவித்துள்ளது.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், காசு களவெடுத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் கால் சட்டையை களற்றுமாறு கூறுகிறார்கள். ஜட்டியை கூட உருவ இவர்கள் தயார். இவர்கள் யார் என்று பார்த்தால், அது பெரும் விடையமாக உள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி சினிமா படங்களை தயாரித்தால். அதனை களவாடி இணையத்தில் வெளியிடும் இந்த குழுவினரது கடையில் தான் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

தினை விதைத்தால் தினையை தானே அறுவடை செய்ய முடியும் ? அட அந்த சினிமா படங்களை வெளியிட்டும் இணையம் எது என்று அறிய ஆவலாக இருக்கா ? அது வேறு யாரும் இல்லை தமிழ் கண்.காம் தான் போங்கள் !