பெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய்.!

புற்றுநோய் என்பது ஒரு கால கட்டங்களில் அரிதான நோய்யாக இந்தியாவை பொறுத்த வரையில் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நிலையானது தற்போது மாறி பெண்களுக்கு அதிகளவில் ஏற்பட துவங்கியுள்ளது. இந்த புற்றுநோய் எதற்கு ஏற்படுகிறது என்பது பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு தெளிவான ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை.

புற்றுநோயை ஏற்படுத்தும் உயிரணுக்கள் ஈஸ்டிரஜன் எனப்படும் ஹார்மோனின் மூலமாக தனது வளர்ச்சியை பெருக்கி பரவக்கூடியது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பெண்கள் இயற்கையாகவே 9 வயதிற்கு முன்னதாக பருவமடைவது அல்லது நீண்ட வருடங்கள் கடந்த பின்னதாக., அதாவது 55 வயதிற்கு பின்னர் பருவமடைவது காரணமாக பெண்களுக்கு பெரும்பாலும் மார்பக புற்றுநோய்யானது ஏற்படுகிறது.

மேலும் திருமண வயதை தள்ளிப்போட்டு 30 வயதிற்கு மேலாக குழந்தைகளை பிரசவிப்பதன் மூலமாகவும் இந்த பிரச்சனை ஏற்படவாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாது., திருமணத்திற்கு பின்னர் பெண்களின் எடை விசயத்தில் கவனகுருவாக இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது.

பெண்மையை தக்கவைப்பதற்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் மற்றும் ஆடம்பரத்திக்காக அருந்தும் மதுக்களின் மூலமாகவும் மார்பக புற்றுநோய்யானது மிக எளிதாக உருவாகிறது. மார்பகத்தை மாதத்திற்கு ஒருமுறை சுயமாக சோதனை செய்துகொண்டு அதன் மூலம் மார்பகத்தில் மாற்றங்கள் ஏதும் தென்படும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.

மேலும் மார்பகத்தில் நீர்க்கசிவு மற்றும் இரத்த கசிவுகள் ஏதும் இருப்பின் உடனடியாக தங்களின் தாயார் அல்லது கணவரிடம் விசயம் குறித்து கூறிவிட்டு மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்வது நல்லது. எந்த ஒரு விசயத்தையும் வருமுன் காத்தலே நமக்கு நல்லது. முடிந்த அளவிற்கு அழகிய தோற்றத்தை தரும் (இறுக்கமான) ஆடைகளை துறந்து., காற்றோட்டமான பாரம்பரிய ஆடைகளை அணிவது நல்லது.