ஓபிஎஸ் மேற்கொண்ட திடீர் பயணம் – தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது குடும்பத்துடன் இன்று காலை, பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள்.

சிவபெருமானின் தேவியான பார்வதி தேவி தன்மகன் ஆண்டிக் கோலத்தில் பழனி மலையில் நின்ற முருகப் பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளாக போற்றப்படும் பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கோயில்களில் இன்று சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது குடும்பத்துடன், பழனி முருகன் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

எதிர்பாராமல் துணை முதல்வர் வருகை புரிந்துள்ளதால், திண்டுக்கல் மாவட்ட அதிமுக தொண்டர்கள் இன்பஅதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.