கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்

அமெரிக்காவில் கொடூர கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட 51 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல சூழல்களில் இவர்கள் சிறார்களையும் முன்னாள் காதலர்களையும் அறிமுகமற்றவர்களையும் கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடல் உறுப்புகளை துண்டித்தும் பட்டினி போட்டும் உயிருடன் புதைத்தும் பல கொலைகளை இவர்கள் செய்துள்ளனர்.

கடந்த நூற்றாண்டின் துவக்கம் முதல் இதுவரை பெண் குற்றவாளிகள் 54 பேருக்கு அமெரிக்க நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும் உள்ளனர்.

டெக்சாஸ், ஜோர்ஜியா, பிலோரிடா, ஒக்லாஹமா, அலபாமா, வட கரோலினா, ஆர்கன்சாஸ், வர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 30 ஆண்டுகளில் பெண் குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கிறிஸ்டா பைக் என்ற யுவதியின் கதை உண்மையில் மனித மனசாட்சியை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

உயர்தர தேர்வில் தோல்வியுற்ற கிறிஸ்டா பைட் வேலை வாய்ப்புக்கான தொழில்முறை வகுப்புகளில் இணைந்துள்ளார்.

அங்கே ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இதனிடையே காதலும் தோல்வியில் முடிந்துள்ளது.

தொடர்ந்து சாத்தான் பூசையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தமது முன்னாள் காதலருடன் வேறொரு இளம் பெண் நெருக்கமாக இருப்பதை அறிந்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த கிறிஸ்டா, நண்பர்கள் இருவரது துணையுடன் குறித்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து அவரது மண்டை ஓட்டின் ஒரு துண்டை கைதாகும் வரை பத்திரப்படுத்தி வந்துள்ளார்.