வேப்பிலை இப்படி யூஸ் பண்ணுங்க!

சித்த மருத்துவத்தில் வேப்பிலைக்கு என்றே ஒரு தனியிடம் உள்ளது.

இது முக்கியமாக அம்மை நோய், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், போன்ற பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

அந்தவகையில் பெண்களும் ஆண்களும் தற்போது பெரும் தொல்லையாக உள்ளது இந்த பொடுகு பிரச்சினை தான்.

பொடுகினால் முகப்பருக்கள் அதிகமாகும். நாளுக்கு நாள் பொடுகு அதிகரிக்குமே தவிர என்ன செய்தாலும் குறையாது. இந்த பிரச்சினையிலிருந்து விடுபட வேப்பிலை பெரிதும் உதவுகின்றது. தற்போது வேப்பிலையால் பொடுகை ஓட விரட்ட முடியும் அது எப்படி என பார்க்கலாம்.

வேப்பிலை நீர்
தேவையானவை
  • வேப்பிலை – 2 கைப்பிடி
  • நீர் – 1 லிட்டர்
  • தேன் – 1 ஸ்பூன்
செய்முறை

நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து அதில் 2 கைப்பிடி வேப்பிலையை போட்டு இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள்.

மறு நாள் காலையில் வேப்பிலை வடிகட்டி அந்த நீரை பத்திரமாய் எடுத்து வையுங்கள். இப்போது ஊறிய வேப்பிலையை அரைத்து அதனுடன் தேன் கலந்து தலையில் தடவுங்கக்ள்.

30 நிமிடங்கள் கழித்து தலையை அலசியபின் அந்த ஊறிய வேப்பிலை நீரால் இறுதியாக அலசுங்கள். பொடு தூர ஓடிடும்.

வேப்பிலை மாஸ்க்
தேவையானவை
  • வேப்பிலை – 2 கைப்பிடி
  • வெந்தயம் -2 ஸ்பூன்
  • யோகார்ட் – அரை கப்
  • எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
செய்முறை

வெந்தயத்தை முன்னமே ஊற வைத்திடுங்கள். பின்னர் ஊறிய வெந்தயத்துடன் வேப்பிலை கலந்து நன்ராக அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் யோகார்ட், எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.

இந்த இரண்டு குறிப்புகளுமே மிகவும் பயனளிக்கும். உபயோகித்துப் பாருங்கள். பொடுகு பிரச்சினையிலிருந்த எளிதில் விடுபட முடியும்.