மருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி

இங்கிலாந்தில் மருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது, பாலியல் உறவு வைத்துக்கொண்ட தம்பதிக்கு எதிர்பார்க்காத விதமாக 3 குழந்தை பிறந்து அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பெட்டி பியிநியாஸ் (36) மற்றும் அவருடைய கணவர் பவெல் தம்பதியினர் கடந்த 7 வருடங்களாக குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.

பின்னர் பெத் பகுதியில் உள்ள ராயல் ஐக்கிய மருத்துவமனையை அணுகிய தம்பதி, அங்கிருந்த மருத்துவரின் அறிவுரையை ஏற்று, செயற்கை கருத்தரித்தலின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.

அதற்கான வேலைகளும் நடைபெற ஆரம்பித்தன. கருமுட்டைகள் சேர்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு வரை எந்த பாலியல் உறவும் வைத்துக்கொள்ள கூடாது என மருத்துவர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

தம்பதியினர் இருவரும் மருத்துவரின் அறிவுரையை மீறி, உறவு வைத்துள்ளனர்.

4 நாட்கள் கழித்து கருமுட்டை பெட்டியின் கருப்பையில் செலுத்தப்பட்டது. இதற்கிடையில் இயற்கையான கருத்தரித்தலின் மூலமும் கரு உருவாகியிருக்கிறது.

இந்த நிலையில் டிசம்பர் 13-ம் தேதியன்று 36 வார கர்ப்பிணியான பெட்டிக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இயற்கையான கருவின் மூலம் மத்திலா மற்றும் போரிஸ் என்ற குழந்தைகளும், செயற்கை கருத்தரித்தலின் மூலம் அமெலியா என்ற குழந்தையும் பிறந்துள்ளது.