காத்திருந்த டோனி! ஒரே தொடரில் வாங்கி காட்டி அசத்தல்…

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அசத்தியதன் மூலம் தொடர் நாயகன் விருது வாங்கிய டோனி, பத்து வருடங்களுக்கு பின் இப்போது வாங்கியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுதன் மூலம் தொடரை 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

கோஹ்லி தலைமையிலான அணி, தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வருவதால், இந்திய அணிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஜெயிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் டோனி. இவர் முதலில் ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதன் பின் அதிரடியாக ஆடி 87 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த போட்டி மட்டுமின்றி, முதல் ஒரு நாள் போட்டியில் 51 ஓட்டம், 2ஆவது ஒரு நாள் போட்டியில் 55 ஓட்டம் மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி 87 என மொத்தம் 193 ஓட்டங்கள் குவித்து இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை வாங்கினார்.

டோனி இந்த விருதை 10 வருடங்களுக்கு பின்பு இப்போது தான் வாங்குகிறார். அதுமட்டுமின்றி இந்திய அணியில் அதிக முறை தொடர் நாயகன் விருது வாங்கியவர்கள் பட்டியலில் 7 முறை கோஹ்லியுட இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார்.

கோஹ்லி, டோனியைத் தவிர கங்குலி, யுவராஜ்சிங்கும் 7 முறை தொடர்நாயகன் விருதை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.