ஒரே இடத்தில் குவிந்த கல்லூரி மாணவர்கள்.! போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு.!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நுழைவாயில் முன் குவிந்த கல்லூரி மாணவ, மாணவிகள் திடீரென போராட்டத்தில் இறங்கி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்வு முறை மாற்றத்தை கைவிடக் கோரி, சென்னை அண்ணா பல்கலை கழக நுழைவாயில் முன்பு கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2017 ஆம் ஆண்டு புதிய தேர்வு கட்டுப்பாடு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு உள்ளனர்.

மேலும், நெல்லை மற்றும் வேலூரிலும் அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.