ஆசிரியரால் மூன்றாம் தரம் மாணவி மருத்துவமனையில் அனுமதி!

ஆசிரியரொருவரின் தாக்குதலில் சியம்பலாண்டுவ ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்றுவந்த மாணவியொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சியம்பலாண்டுவ பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் மொனராகலை சிறிகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடத்திற்கு தேவையான உபகரணமொன்றை எடுத்து வராததால் குறித்த ஆசிரியர் மாணவியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு முன்னர் ஆசிரியரால் மாணவி முழங்காலிப்பட்டுள்ளதாக அவரின் தந்தை எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் சியம்பலாண்டுவ காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எவ்வாறாயினும் , சம்பவம் தொடர்பில் வினவ எமது செய்திச் சேவை குறித்த பாடசாலையின் அதிபருக்கு அழைப்பினை ஏற்படுத்தியிருந்த நிலையில் , அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.