பல ஊர்களில் நாம் அன்றாடம் உபயோகம் செய்யும் பொருட்களான நமது வாகனங்கள் திருபோய்விட்டது என்று காவல் நிலையத்தில் புகார் அளித்து பின்னர் காவல் துறையினர் அதனை கண்டு பிடித்து தருவது வழக்கம். அந்த வகையில் மிதிவண்டிகளும் இந்த திருட்டிற்கு விதிவிலக்கல்ல..
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகிலுள்ள கிராமம் திருத்தங்கல்., இந்த கிராமத்தை சார்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவியின் பெயர் இனியவள் (26). கடந்த 12 ம் தேதியன்று அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட தனது மிதிவண்டியில் சென்ற இவர்., மிதிவண்டியை கோவில் வாயிலில் ஓரமாக வைத்துவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது மிதிவண்டி காணாததை கண்டு அதிர்ச்சியடைந்து., சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகையில்., சிவகாசியில் உள்ள காமராசர் சிலை அருகேயுள்ள பகுதியில் இனியவள் நின்று கொண்டு இருந்த போது வாலிபர் ஒருவர் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார்.
அந்த மிதிவண்டியை காலையில் அவருக்கு ஒருகணம் தனது மிதிவண்டி என்பதை உணர்த்து., அங்கிருந்த காவல் துறை அதிகாரியிடம் தகவலை தெரிவித்தார். இதனை கேட்டு உடனடியாக அந்த வாலிபரை மடக்கி பிடித்த காவல் துறை அதிகாரி., அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்., அவரு அங்குள்ள முருகன் காலனி பகுதியை சார்ந்த மாரியப்பனின் மகன் மாடசாமி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து மிதிவண்டியை திருடிய குற்றத்துக்காக மாடசாமியை காவல் துறையினர் கைது செய்தனர்., மேலும்., திருடுபோன மிதிவண்டி மீண்டும் கிடைத்ததையடுத்து மகிழ்ச்சியுடன் இனியவள் இல்லத்திற்கு விரைந்தார்.






