பரபரப்பான வாழ்க்கை சூழலில் சிறு உடல் உபாதைகள் கூட நம் அன்றாட பணிகளை செய்யவிடாமல் தடுக்கிறது. வெறும் சக்கையை சாப்பிட்டு வாழ்வதினால் சளி, இருமல், தலைவலி போன்ற சிறு சிறு பிரச்சனைகள் கூட சில நேரத்தில் பெரும் பிரச்சனையாகிவிடுகிறது. நம் முன்னோர்கள் கண்டறிந்த இயற்கை மருந்தை மறந்ததும் ஒரு கரணம். நம் முன்னோர்கள் கண்டறிந்த சளி இருமல் போக்கும் ஒரு அரிய தாவரம் கற்பூரவள்ளி பற்றி அறிவோம்.
கற்பூரவள்ளி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகை செடி. எந்த ஒரு பெரிய பாராமரிப்பு இல்லாமல் எளிதில் வளரக்கூடிய இச்செடியின் பயன்களை காண்போம்.
- பொதுவாக இது ஒரு கிருமி நாசினி
- காய்ச்சல், சளி, தலைவலிக்கு அருமருந்து
- இத்தாவரம் வியர்வை உண்டாக்கும் தன்மை கொண்டது
- இதன் சாறு எடுத்து தேனுடன் கலந்து கொடுக்க மழலையின் இருமல் குணமாகும்
- இதன் சாறுடன் சீனி, நல்லெண்ணெய் கலந்து நெற்றில் பற்று போட தலைவலி குணமாகும்
- இது குழந்தைகளின் அஜீரணம் போக்கும் குணம் கொண்டது
இது மட்டும் அல்லாமல் மருத்துவ துறையில் இந்த கற்பூரவள்ளி பெரும் பங்கு அளித்து வருகிறது. இளைப்பு, வயிறு சம்பந்தமான நோய், கண் அழற்சி மற்றும் நரம்புகளுக்கு சத்து தரும் மருந்தாகிறது.
இவ்வளவு பயன் அளிக்கும் இத்தாவரம் வளர்ப்பதும் பெறும்பாடல்ல இதன் வளர்ந்த தண்டை எடுத்து சிறு தொட்டியில் நட்டாலே போதும் நல்ல புதர் போல வளரும். நோய்களில் இருந்து நம்மை காப்போம் கூடவே நம் மரபினையும் இயற்கையையும் சேர்ந்து காப்போம்.






