துரோகம் செய்வது அவளுக்கு புதிதில்லை: அமேஸான் நிறுவனரின் காதலி குறித்து முன்னாள் கணவர்!

அமேஸான் நிறுவனரின் புது காதலி குறித்து பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், துரோகம் செய்வது அவளுக்கு புதிதில்லை என்று அவரது முன்னாள் கணவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு வீரரும் Lauren Sanchezஇன் முன்னாள் கணவருமான Anthony Miller (53) தனக்கு Lauren துரோகம் செய்ததாகவும், அவரது தேவைகளுக்கெல்லாம் தான் செலவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அமேஸான் நிறுவனரான Jeff Bezosஇன் புது காதலியான Lauren, தன் கணவருடன் இருக்கும்போதே Jeffஉடன் சுமார் எட்டு மாதங்கள் தவறான உறவில் இருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், அவரது முன்னாள் கணவரான Anthonyயும் அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

ஒரு தொலைக்காட்சி நிருபராக இருக்கும்போது Laurenஐ சந்தித்தார் Anthony. இருவரும் நான்காண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர், பின்னர் நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் ஒன்றரை வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர்.

ஒரு நாள் Laurenஇன் டைரியை வாசிக்க நேரிட்டபோது அவர் தனக்கு துரோகம் செய்வதையும், பலருடன் தொடர்பில் இருப்பதையும் அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார் Anthony.

அதன் பின்னர் Anthony, Laurenஐ பிரிந்து விட்டாலும் தனது நிச்சயதார்த்த மோதிரத்தைக்கூட Lauren திருப்பித்தரவில்லை என்கிறார்.

ஆனால் இந்த தம்பதியினரை அறிந்தவர்களோ, Anthony ஒரு ஆபாச நடனமாடும் பெண்ணுடன் தவறான உறவில் இருந்ததாலேயே அந்த ஜோடி பிரிந்ததாகத் தெரிவிக்கிறார்கள்.

அத்துடன் Anthony ஒரு சந்தர்ப்பவாதி என்றும், இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு, Lauren மீது குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கியதும், 20 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கள் உறவை குறித்து பேசுவதாகவும் தெரிவிக்கிறார்கள் அவர்கள்.

இதற்கிடையில், Jeff Bezosஉடன் தவறான உறவு ஏற்படும்போது Lauren, Patrick Whitesellஉடன் திருமண பந்தத்தில் தொடர்ந்து இருந்ததும், அதற்குமுன் நடிகரான Henry Simmonsஉடனான உறவு நிச்சயம் வரை சென்றதும், Tony Gonzalez என்னும் விளையாட்டு வீரருடன் Laurenக்கு ஒரு மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.