வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

காணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் மாற்றத்தை ஏற்படுத்த வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் முடிந்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மோதரவான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 660 குடும்பங்களுக்கு 1300 இலட்சம் ரூபா வீட்டுக் கடன் வழங்கப்படுமென்று அவர் குறிப்பிட்டார்.

17 விஹாரைகளுக்கு தொல்பொருள் வெளியீட்டு நூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.