அதிர்ச்சியில் ரசிகர்கள்………. பம்பலப்பிட்டி திரையரங்கிற்குள் இப்படியொரு நிலையா?

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல சினிமா திரையரங்கு ஒன்றை மூட்டைப்பூச்சிக் காரணமாக மூடுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சினிமா அரங்கில் உள்ள ஆசனங்களில் அதிகளவு மூட்டைப்பூச்சிகள் காணப்படுவதால் அதனை மூட நடவடிக்கை எடுத்ததாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளார்.

இதனையடுத்து, சினிமா திரையரங்கை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைவில் மூட்டைப்பூச்சிகளை அழித்து திரையரங்கை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.