வத்தளை – ஹேக்கித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பாதாள குழுக்களுக்கு இடையிலான முறுகலே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.வத்தளை – ஹேக்கித்த பகுதியில் நேற்று மாலை, காரொன்றில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது, மற்றுமொரு காரில் வந்தவர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் கொழும்பு கொட்டஞ்சேனை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் 31 மற்றும் 38 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது.
பும்மா குழுவுக்கும், குடு செல்லி எனப்படும் பாதாள உலக குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடே இந்த மோதலுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, சம்பவம் தொடர்பில் நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு வேறுபட்ட கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.







