அயர்லாந்தில் 6 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த காதலிக்கு, விரலில் நிச்சயதார்த்த மோதிரத்தை காதலன் அணிந்து விட்டுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அயர்லாந்தை சேர்ந்த டான் க்ரோக் என்பவர் செயின்ட் கிரோனா தேசிய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த வியாழக்கிழமையன்று தன்னுடைய காதலன் பேடி மெக்ஹுக் மற்றும் 6 வயது மகளுடன் காரில் சென்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னோக்கி சுழல ஆரம்பித்துள்ளது.
இதில் விரைந்து செயல்பட்ட க்ரோக், லாவகமாக தன்னுடைய மகளை வெளியில் தூக்கியெறிந்துவிட்டு தன்னுடைய உயிரை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் அனைவருக்கும் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்த போது, இறந்த தன்னுடைய காதலியின் விரலில் நிச்சயதார்த்த மோதிரத்தை மெக்ஹுக் அணிந்துவிட்டு அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.