உடையின்றி சுற்றும் அகோரிகள்!

இறந்தவர்களின் உடலை உண்டு, உறவு கொள்ளும் அகோரிகள் குறித்து ஜேம்ஸ் மலிசன் என்பவர் நடத்திய ஆய்வில் அவர்களின் வாழ்க்கை மற்றும் சமூக பணி குறித்து தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

பொதுவாக மக்களுக்கு அகோரிகள் என்றாலே அவர்களின் கோர முகம் தான்நினைவிற்கு வரும். நாம் கேள்விப்பட்ட வரை அவர்கள், சொந்த மலத்தை உண்பது, இறந்தவர்களின்உடலை உண்பது மற்றும் இறந்த உடல்களுடன் உறவு கொள்வது மட்டுதான்.

இது போன்ற பல்வேறு கருத்துகள் நிலவும் அகோரிகளின் உண்மை நிலைமற்றும் இடத்திற்கு இடம் மாறுபடு விதம் குறித்து லண்டனில் சேர்ந்த ஜேம்ஸ் மலிசன் என்ற ஆசிரியர் ஆய்வுமேற்கொண்டு வருகிறார்.

அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, கடவுளுடன் ஒன்றாக இருப்பதற்காகவேஅவர்கள் எல்லாம் துறந்து அதன் வழில் நடப்பது என்பதே அவர்களின் எண்ணம். நிகழ்வுகளில்பெரும் தடையக இருக்கும் விஷயங்கள் என்று எண்ணுதலை உடைப்பதே அகோரிகளின் நிலை.

மனித மாமிசத்தை உண்ணுவது, தங்களின் மலத்தைஉண்ணுவது இவை எல்லாம் மேம்பட்ட வாழ்க்கையை அடையும் நிலைகள் என்று அகோரிகள் நம்புகின்றனர்.

பல்வேறு காலங்கள் சூழல்களுக்கு ஏற்ப அகோரிகளின்செயல்முறைகளில் மாற்றம் உள்ளது. அதில் மண்ணை ஓட்டை ஏந்தி நிற்பது, உயிர்பலி கொடுப்பதுஉள்ளிட்ட வழக்கங்கள் உள்ளன.

மேலும் மற்ற சாமியார்கள் போல் அகோரிகளுக்குஒற்றுமை இருக்காது. தனித்தே வாழும் நிலை கொண்டவர்கள். மேலும் வெளி மனிதர்களையும் தங்களின்குடும்பத்தினரையும் நம்பும் வழக்கமில்லாதவர்களாக இருப்பர்.

அகோரிகளாக இருப்பவர்கள் நல்ல அறிவாற்றல் உள்ளவராகஇருப்பர் என்றும், குறிப்பாக நேப்பாள் நாட்டின் அரசருக்கு ஆலோசகராக ஒரு அகோரி இருந்திருக்கிறார்என்றும் ஜேம்ஸ்மலிசன் தெரிவித்துள்ளார்.

மேலும், கஞ்சா புகையிலை பயன்படுத்தும் அகோரிகள் போதை நிலையிலும்தன்னை விழிப்புடன் கட்டு படுத்தி கொள்ளும் தன்மை கொண்டவர்களாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அகோரிகள் ஒரு சமூக பணியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்என்றால் யாராலும் நம்ப முடிவதில்லை. ஆம் வாரணாசியில் தொழுநோய் நிலையம் அமைத்துள்ளனர்.அதில் கைவிடப்பட்ட பல தொழுநோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு குறிப்பாக ஆயூர்வேத முறையில் இருந்து நவீன மருத்துவமுறையில் கூட சிகிச்சை வழங்கப்படுகிறது.