பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மந்திரவாத நாய்..

பொலநறுவையில் கழுத்தில் மந்திர தாயத்துடன் சுற்றித்திரியும் நாய் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

மந்திர தாயத்துடன் நாய் ஒன்று சுற்றித்திரிவது குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பொலன்னறுவை – அரலங்வில வீதியின் திம்புலாகல பகுதியில் இந்த நாய் சுற்றித் திரிவாக தெரிய வருகிறது.

தாயத்துடன் திரியும் நாய் அமானுஷ சக்தி கொண்டதாகவும் மந்திர தந்திர வேலைகளுக்காக இந்த நாய் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மந்திர சாத்திரங்கள் மீது அதிகம் நம்பிக்கை கொண்டுள்ள இலங்கையர்கள் இறுதியில் நாயையும் விட்டு வைக்கவில்லை என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.