ஜல்லிக்கட்டைக் கண்டு, வந்த வீரமான காதல்….!

சங்க காலத்திற்கு முன்பிருந்தே, ஏறு தழுவுதல், என்பது மரபாகவே, இருந்தது. அப்போதெல்லாம், பொங்கல் விழாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு, ஏதாவது ஒரு காளையை அடக்கினால் தான், பெண்ணே தருவார்கள்.

பல கன்னியர்கள், இந்த ஜல்லிக்கட்டைக் காண, ஆவலுடன் வருவர். அவர்களைக் கண்டதும், காளையர் மனமும், காளையை விடத் துள்ளும். அதற்காகவே, விடாப்பிடியாக, காளையை அடக்கிய, வீரமான காளையர்களின், காதல் கதைகள், நமது தமிழர் பாரம்பரியத்தில், இன்னும் நீங்காத நினைவுகளாக இருக்கின்றன.

அந்தக் காலத்தில், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திலேயே, பல காளையர்களை கன்னியர்கள் கண்டு, காதல் திருமணம் செய்து கொண்ட வரலாறெல்லாம் ரொம்ப சுவராசியமானது. பலர், அந்தக் காளைகளை, பிள்ளைகளைப் போல வளர்த்து, ஸ்டுடியோவிற்குச் சென்று, அந்தக் காளைகளுடன் கருப்பு வெள்ளையில், தங்கள் குடும்பத்தினருடன் படம் எடுத்து வைத்து, அதை நினைவு கூர்கின்றனர்.