பாண்டியாவின் வாழ்க்கை பறிபோனது.. தனியார் நிறுவனத்தின் திடீர் அறிவிப்பு..?

ஸ்டார் நெட்வொர்க்கின் காஃபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தொடக்கவீரர் லோகேஷ் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் தொடர்பான பாலியல் அந்தரங்க விஷயங்களை ஹர்திக் பாண்டியா வெளிப்படையாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

விமர்சனங்களைக் கண்டு நடுங்கிய ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் தன்னுடைய வீரர் என்ற அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த விஷயத்தில் நேரடியாகக் களமிறங்கி விளக்கம் கேட்டது.

பாண்டியாவின் விளக்கம் திருப்தியளிக்காததால் பிசிசிஐ நிர்வாக குழு தலைவர் வினோத் ராய், ஹர்திக்பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் விசாரணை முடியும் வரை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டார்.

இந்நிலையில்,பிரபல தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா தற்போது அந்த ஒப்பந்தத்தில்இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதனால் சர்ச்சையில் சிக்கும் பட்சத்தில் தங்களுக்கும் இதே நிலை வந்து விடுமோ என்ற அச்சம் மற்ற வீரர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் விளையாண்டு வருமானம் ஈட்டுவதை விட, இப்படி விளம்பர நிறுவனங்கள் மூலமாக தான் வீரர்கள் அதிகம் வருமானம் ஈட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கே சிக்கல் ஏற்பட்டது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.