தொதல்….

அரிசி மா -2 சுண்டு(வறுக்காதது)

  • சீனி -1/2 kg
  • சர்க்கரை -1/2 kg
  • தேங்காய் -4
  • சவ்வரிசி -50g(2மே.கரண்டி நிரப்பி)
  • ஏலப்பொடி -1 தே.கரண்டி
  • தண்ணீர் – 9 தம்ளர்
  • உப்புத்தூள் -2 சிட்டிகை
  • வறுத்த பயறு -50g
  • வறுத்த கச்சான் முத்து -100g
  • தேங்காயைத்துருவி பெரியபாத்திரத்திலிட்டு 9 தம்ளர் தண்ணீரில் அளவாகத் தண்ணீர் விட்டுப் பிழிந்து 4 த்ம்ளர் முதல் பாலும், 6 தம்ளர் இரண்டாம், மூன்றாம் பாலும் எடுத்து வைத்துக் கொள்க.
  • பின்பு 6 தம்ளர் 2ம், 3ம் பாலில் சர்க்கரை, சீனி, அரிசி மா, உப்புத்தூள் என்பவற்றைப்போட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை கரைத்துக் கொள்க.(சர்க்கரையைச் சீவிப் பாலில் கரைத்து வடிகட்டியபின் மாவையும் சீனியையும் போட்டுக்கரைத்தல் சிறந்த்தாகும்.)
  • பின்பு இக்கலவையை அடுப்பில் வைத்து இடைவிடாது காய்சிக் கொண்டிருக்கவும்.
  • கய்ச்சும் போது கலவை ஓரளவு தடித்து சட்டியில் ஒட்டும் பதத்தை அடையத்தொடங்கியதும் முதற்பாலை விட்டுக் கரண்டியால் அடிப்பிடிக்கா வண்ணம் இடைவிடாது கிளறிக் கலவை முளுவதுமாகக் கிளறத்தொடங்கும் போது ஏலப்பொடி, பயறு கச்சான் என்பவற்றைப் போட்டுச் சேர்த்து எண்ணெய்ய மிகுதயாகப் பெருகுமாயின் கரண்டியால் இயலுமானவரை அள்ளியெடுத்த பின் சட்டியை அடுப்பிலிருந்து இற்க்கிக்கொள்க.
  • பின்பு சதுர வடிவான தட்டிநில் இக்கலவையைக் கொட்டி தட்டையான் அடிப்பாகமுள்ள பாத்திரத்தால் 2″ தடிப்பாக இருக்கும் வண்ணம் அழுத்திப்பரவி 3cm சதுர அளவான துண்டுகளாக வெட்டிப்பரிமாறவும்.