சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு இளம் பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சிகிச்சைக்காக சென்றுள்ளார். இளம்பெண்ணின் குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவர் ரத்த பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து ரத்த பரிசோதனை மையத்துக்கு ரத்தம் கொடுக்கச் குழந்தையுடன் சென்றுள்ளனர். அப்போது ரத்த பரிசோதனை மையத்தில் டெக்னீசியனாக இருந்த நபர் குழந்தையின் தாய் அழகில் மையங்கியுள்ளார்.
ரத்த பரிசோதனைக்காக வந்த பெண்ணின் கணவரிடம், குழந்தைக்கு ரத்தம் எடுக்க வேண்டும் நீங்கள் வெளியே செல்லுங்கள் என கூறியுள்ளார். கணவர் சென்றுவிட்ட நிலையில், குழந்தைக்கு பரிசோதனை செய்த அந்த நபர், குழந்தையின் தாயிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த குழந்தையின் தாய் அலறிக் கொண்டு வெளியே வந்துள்ளார். குழந்தையின் தாய் ஓடிவந்ததை பார்த்த பொதுமக்கள் மற்றும் அந்த பெண்ணின் கணவர் அந்த லேப் டெக்னீஷியனை பிடித்து அடித்துள்ளனர். இதனையயடுத்து அந்த லேப் டெக்னீஷியனை பணிநீக்கம் செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






