பொங்கல் பரிசினால் போன உயிர்!!

உசிலம்பட்டி அருகே ஏழுமலையை சேர்ந்த ராமர் என்பவர் பொங்கல் பரிசாக கொடுத்த ரூபாய் 1000 தினை கொடுக்காததால் மனைவியை வெட்டி கொன்றுள்ளார்.

ராமரின் மனைவி ராசாத்திக்கும், ராமரும் அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் அரசாங்கம் பொங்கல் பரிசாக அறிவித்த ரூபாய் 1000 ஐ நேற்று ராசாத்தி வாங்கி வந்துள்ளார்.

அந்த ரூபாயில் தனக்கு பாதியை பிரித்து கொடுக்க வேண்டுமென ராமர் சண்டையிட்டுள்ளார். அதற்கு ராசாத்தி மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. பின்னர் வாக்குவாதம் முற்றி தகறாறு ஆகவே, ராமர் மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இதனால், இன்று காலை முதல் மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த ராமர் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராசாத்தியை வெட்டியுள்ளார். இதில் அதிக காயம் ஏற்பட்டு ராசாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆத்திரம் அடங்கியதும், மனைவியின் நிலை கண்டு கலங்கிய ராமர் பின்னர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராசாத்தியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே பொங்கல் இலவச பரிசை வாங்க ரேஷன் கடைகளில் அலைமோதும் கூட்டத்தினால், அடிதடி கொலை அடுத்தடுத்து அரங்கேறும் இந்த நிகழ்வுகளினால் இந்த பணத்தை வங்கி கணக்கில் சேர்த்து இருக்கலாம். விளம்பர அரசியலுக்காக மக்களை பலியாக்குகின்றனர் என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகையில், இப்படி ஒரு சம்பவம் பொங்கல் பரிசு அவசியமா என தோன்ற வைக்கிறது.